Showing posts with label kumaran. Show all posts
Showing posts with label kumaran. Show all posts

Wednesday, 29 June 2016

KAdhalkondaeN (காதல்கொண்டேன்)


KAdhalkondaeN ~ Hymn explanation
(காதல்கொண்டேன் ~ பதிக விளக்கம்)

மன்மத கரும்புவில் வீசிடு மரும்பெனும்
   அம்பது இலாதேம யங்கிடுவார் யாரும்
வெண்பட் டுடன்வைர வைடூர்ய மரகதச்
   செம்பொன் சேர்ந்தமணி முத்தாடு மாபரணங்
கண்கொண்டு காணும் யாவையும் வேண்டியே
   ஐம்பூத மாற்செய்த அழியுமிவ் வுடலுக்கு
மண்கொண்டு போகுமொரு நாளிதை யென்றாலும்
   இம்மியும் மாறாது ஈனவழி மீளாது
பண்கொண்டு பாடியே பாவவாழ் வினைவிட்டு
   ஐம்பொன் சிலையலங் காரமே தும்மின்றி   
கண்மூடி நான்கண்ட கோவணப் பாலகச்
    சம்பூர்ண ஷண்முகன் மேல்கொண்டனே காதல்!   

மன்மதன் தன் கரும்பு வில்லிலிருந்து மலர்மொட்டுக்களாலான அம்பை வீசாமலேயே எல்லோரும் வெண்பட்டுத் துணி, வைர வைடூர்ய மணிகள் மற்றும் முத்துப் பதித்த பொன்னாலான ஆபரணங்கள் போன்ற கண்ணால் காணும் எல்லாப் பொருட்களையும், ஐம்பூதங்களாலான அழியக்கூடிய இந்த உடலுக்காக விரும்புவர், ஒருநாள் இதைப் பூமி எடுத்துக்கொண்டுவிடுமேன்றாலும்கூட.

(ஆனால் நானோ) இசையுடன் கூடிய பாடல் பாடி (இந்தப்) பாவ வாழ்வின் வினையை விட்டுவிட்டு, ஐம்பொன்னால் செய்த, அலங்காரமேதுமில்லாத, என் கண்களை மூடியபோது (என்னுள்) கண்ட, (வெறும்) கோவணம் அணிந்த குழந்தையான பரிபூரணமான ஆறுமுகன் மேல் காதல் கொண்டேனே!  

Manmadha karumbuvil vEsidu marumbenum
   ambadhu ilAdhema yangiduvAr yArum
veNpat tudanvaira vaidoorya maragathach
   sembon serndhamaNi muththAdu mAbaraNang
kaNkoNdu kANum yAvaiyum veNdiyae
   aibootha mARseidha azhiyumiv vidalukku
maNkoNdu pOgumoru nhAlidhai yendRAlum
   immiyum mARadhu eenavazhi meeLAdhu
paNkoNdu pAdiye pAvavAzh vinaivittu
   aimbon silaiyalang gAramae dhummindri
kaNmoodi nhAnkaNda kOvaNap bAlagach
   sampoorNa shanmukhan maelkoNdanae kaadhal!

Even without the floral arrows from the sugarcane bow being shot at them by Manmadhan (Lord of Love), everybody lusts for (shiny) white silk garments and fine gold jewelry embellished with diamonds, cats eye (a gem called Vaidooryam), pearls and everything they see, for this perishable body, even though it will be consumed by earth one day.

(But) Singing hymns with music, letting go of this sinful Life, (I) fell in love with the child that I saw when I closed my eyes, who wears just a loin cloth and looks like a (plain) Panchaloha (alloy of 5 metals) statue without any decorations!
~Swamy

VadivElan Perumai (வடிவேலன் பெருமை)


VadivElan Perumai ~ Hymn explanation
(வடிவேலன் பெருமை ~ பதிக விளக்கம்)

கற்றது பல்கலை என்று திமிரில் தலை பெருத்ததோ
உற்றது உயர்குலம் என்று திணவில் நிலை பெருத்ததோ
மற்றவரும்  சமம் மெய் உணரா மன ஆழி அலை பெருத்ததோ
எத் தவமும் மயில் ஏறு வடிவேலன் முன் மிகச் சிறுக்குமே.

பலவகைக் கலைகளைக் கற்ற (பெருமிதத்) திமிர் காரணமாக (உனது) தலை மிகவும் பெரியதாகிவிட்டதோ?
(உன்னுடைய / நீ பிறந்த) குலம் மிக உயர்ந்தது என்ற இறுமாப்பில் (உனது) நிலை (அந்தஸ்து) மிகவும் பெரியதாகிவிட்டதோ?
(இவ்வுலகிலுள்ள) எல்லா உயிர்களும் சமம் என்ற உண்மையை உணராத (உனது) மனம் எனும் கடலின் அலை மிகவும் பெரியதாகிவிட்டதோ?
எந்த வகையான தவமும் மயிலேறும் வடிவேலன் முன் மிகவும் சிறியதாகிவிடும் (என்பதை உணர்ந்துகொள்)!   

ஒருவன் கற்ற பல கலைகளால் வந்த ஞானமோ, அவன் பிறந்த குலத்தால் வந்த சமூக அந்தஸ்தோ, படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் சமமே என்ற படைப்பின் உண்மை உணராத மனதின் தன்மையோ ஒருவனை மிகவும் இறுமாப்புடன் பெருமிதமடையச் செய்யலாம். ஆனால், கடுமையான முறையில் செய்யப்படும் தவம்கூட, மயில் மீது அமர்ந்திருக்கும் வடிவேலன் முன்பு மிகவும் சிறியதுதான் எனும்போது, மற்ற எதன் காரணமாகவும் ஒருவன் பெருமிதமாக இருப்பது முட்டாள்தனமானது.  

~ ஸ்வாமி

KatRadhu palkalai endRu thimiril thalai peruththadhO
UtRadhu uyar kulamendRu thiNavil Nhilai peruththadhO
matRavarum samam meyyuNarA manavAzhi alai peruththadhO
etRavamum mayilERu vadivElan mun miga siRukkumae.

Has your head become too big because of your arrogance arising from many skills learned?
Has your status become too big because of your vanity due to the class of your birth?
Has the size of waves in your mind ocean become too big because of your ignorance of the fact that all creations are equal?
(Just know that) Even all kind of penances are too minuscule in front of Lord Vadivelan, who is atop the peacock.

One may feel very proud of various skills learned / variety of knowledge possessed or the social status due to the class of birth or due to the ignorance of the fact that all beings created are equal. When even any kind of penance is so minuscule in front of Lord Vadivelan, who sits atop the peacock, assuming anything else is greater is just stupid.

~ @PrakashSwamy