Showing posts with label Creator. Show all posts
Showing posts with label Creator. Show all posts

Wednesday, 29 June 2016

VeLiVeLi (வெளிவெளி)!


VeLiVeLi ~ Hymn explanation
(வெளிவெளி ~ பதிக விளக்கம்)

வெளிவெளி வட்டவாழ் வுற்றருடன் சுற்றுவாழ் வேண்டேன்
வெளிவெளி வெட்டிவாழ் வேட்கையைப் பற்றுவாழ் வேண்டேன்
வெளிவெளி கொட்டமடி கூட்டமொடு சிற்றுவாழ் வேண்டேன்
வெளிவெளி பட்டம்பல வித்தைகளுங் கற்றுவாழ் வேண்டேன்
வெளிவெளி திட்டமொடு கற்றதனை விற்றுவாழ் வேண்டேன்
வெளிவெளி சட்டமிகு சாத்திரமொ டொற்றுவாழ் வேண்டேன்
வெளிவெளி கட்டையுடல் மறுத்துபற் றற்றுவாழ் வேண்டேன்
வெளிவெளி நிட்டையில் நாதனரு ளூற்றுவாழ் வேண்டும்!

வெளிவெளிஎன இருமுறை குறிப்பிடப்படுவது உள்ளுறையும் உருவிலா ஈசனின் வெளிதோற்றமான நம்மையும் (முதல் வெளி) அதனைப் பிறர் அறிந்த, தெரிந்த, புரிந்த தன்மையையும் (இரண்டாவது வெளி) குறிக்கும். இவை இரண்டுமே மாயை.

ஒரு (குறுகிய) வட்டத்துள் உற்றார் மற்றும் சுற்றத்தாருடன் வாழும்  வெளிவெளி வாழ்க்கையை வேண்டேன் (நான் விரும்பவில்லை)

(உயர் நோக்கமில்லாது) வெட்டியாக ஆசையைப் பற்றிக்கொண்டு வாழும் வெளிவெளி வாழ்க்கையை வேண்டேன் (விரும்பவில்லை)

(ஆட்டம் பாட்டம் குடி கூத்து என) கொட்டமடிக்கும் கூட்டத்தாரோடு சிற்றின்பத்தை நாடும் வாழ்க்கையை வேண்டேன் (விரும்பவில்லை)

வெறுமனே (முடியும் என்பதால் அல்லது பிறர் செய்வதால்) பட்டங்கள் பெற்று பல வித்தைகள் கற்று (பயனிலாது) வாழும் வாழ்க்கையை வேண்டேன் (விரும்பவில்லை)   

(சமூகத்தில் உயரும் பொருட்டு) திட்டமிட்டு கற்றவற்றை (பொருள் ஈட்டுவதற்காக) விற்று வாழும் வாழ்க்கையை வேண்டேன் (விரும்பவில்லை)

(கடுமையான) சட்டங்களுடன் கூடிய சாத்திர வழிமுறைகளைக் (ஏன், எதற்கு என்று அறியாமலே) கடைபிடித்து வாழும் (போலி) வாழ்க்கையை வேண்டேன் (விரும்பவில்லை)     

(அதற்காக இப்பிறவியில் பெற்ற) வெறும் கட்டை போன்ற இவ்வுடலை மறுத்து (அதைப் பேணுவதற்காக கவனம் செலுத்தாமல்) எவ்விதப் பற்றுமில்லாது வாழும் வாழ்க்கையை(யும்) வேண்டேன் (விரும்பவில்லை)  

(எப்போதும் - விழித்திருக்கும்போதுகூட) தியானத்தில் ஈசனருள் ஒரு ஊற்றுப் போலப் பெருக்கெடுக்கும் (ஞானமடைந்த பெரியோர்கள் போல) வாழ்வை வாழ வேண்டும் (என நான் விரும்புகிறேன்)
~ ஸ்வாமி  

VeLiVeLi vattavAzh vuTRarudan suTRuvAzh vENdEn
VeLiVeLi vettivAzh vEtkayaip paTRuvAzh vENdEn
VeLiVeLi kottamadi koottamodu siTRuvAzh vENdEn
VeLiVeLi pattampala viTHaigalum kaTRuvAzh vENdEn
VeLiVeLi thittamodu kaTRadhanai viTRuvAzh vENdEn
VeLiVeLi sattamigu sATHiramo doTRuvAzh vENdEn
VeLiVeLi kattayudal maRuTHupaTR aTRuvAzh vENdEn
VeLiVeLi Nhittayil NhAdhanaru LooTRuvAzh vENdum

VeLiVeLi (emptiness outside) is the external expression (beyond the perceived personality) of the (inner) self. The dual emphasis is because the self (அருவம் aka Purusha i.e. Shiva) that resides in the UlVeLi (உள்வெளி - emptiness within) that finds expression thru the being (உருவம் aka PrAkruti i.e. Shakti - not just human, but all beings created) in the external emptiness (vast void of the known & expanding universe), which in turn is perceived differently by different beings! 🙏🏼😌🙌🏼 Both are MAyA (not reality / Truth).

In the emptiness outside…

(I) don’t desire the Life within a limited circle of near & dear

(I) don’t desire the purposeless Life lived by holding on to (one’s) desires

(I) don’t desire the Life of / with those who (senselessly) seek only pleasures of the sense organs

(I) don’t desire the Life full of degrees & titles that merely represent the accumulation of knowledge & skills (but lacking awareness)

(I) don’t desire the Life of scheming to sell my knowledge (for survival / better social status)

(I) don’t desire the Life full of hard rules & regulations that are expected to be followed (without really knowing the purpose)    

(I) don’t desire the Life that rejects this being (physical form) and leaves everything (like a renunciate)

(I) desire the Life in which (even when I am awake) I’m at peace (as if in meditation) with the Lord’s Grace flowing like a stream (forever).

~ @PrakashSwamy

Monday, 25 April 2016

நமசிவாய நாதம்!

நமசிவாய நாதம்!
(a #moetry*)
.
அம் என விரியும் பார்வை
உம் என நுகரும் வாசம்
இம் என இனிக்கும் அறுசுவை
ஆம் என அணைக்கும் தொடுகை
ஓம் என ஒலிக்கும் ஒலியென
ஐம்புலன் மூலம்
அறிவது தாண்டி
...
ம் என விரியும் சிந்தையின்
எண்ணிலா எண்ணம் தாண்டி
...
தனதை ஒதுக்கித்
தானை அடக்கித்
தன்னுள் தேடித்
தவத்தில் அடங்க
...
வெறுமையின் பரப்பில்
அமைதியின் ஒலியில்
அருவத்தின் வடிவில்
இருளின் ஒளியில் 
அருளின் தழுவலில்
அகத்துள் அறிவது
...
பெரு வெடித் தொடக்க் 'அ'
பரம் இகத் தொடர்வ் 'உ'
பேரூழ் அழி முடிவு 'ம்'
...
சுற்றும் காலச் சுழலின் வெளியில்
...
'ந' கரும் மறுபடி நேரம்
'ம' லரும் மற்றொரு உலகம்
'சி' தறும் உயிர் பல உருவம்
'வா' ழும் அவை பின் தேடி
'ய' றியும் மெய் தம் உள்ளே
...
அ உ ம் என
அகிலம் அனைத்தும்
நமசிவாய எனும்
நாதனின் நாதம்!

.

~ @PrakashSwamy

* 'm'obile p'oetry' - good ol' #poem, crafted on #mobile devices!

Try swamyem.blogspot.in for more enchanting #poems by Swamy, aka #swamyem! 😌

Sunday, 14 June 2015

இலன் எனினும் உளன்!

உளன் எனில் உளன்.
இலன் எனில் இலன்.

உளன் கதிரவன் காலை ஒளியில்.
இலன் அவன் மாலை இருளில்!

உளன் தென்றல் மர அசைவில்.
இலன் காற் றசையா மரத்தில்!

உளன் நீர் பொழி மழையில்.
இலன் சுனை நிலத் தடியில்!

உளன் வான் வெளிர்நீல வெளியில்.
இலன் கரு மேகக் கவர்வில்!

உளன் பறவை கரை ஒலியில்.
இலன் இறகு மடித்தொரு கிளையில்!

உளன் நாக மெடு படத்தில்.
இலன் உதிர் இலை மறைவில்!

உளன் விரி மலர் மணத்தில்.
இலன் வாடி வீசிய கூளத்தில்!

உளன் உண்ணும் முன் இலையில்.
இலன் உண்ட பின் உள்வயிற்றில்!

உளன் வளர்ந்து சுருங்கும் உடலில்.
இலன் எரிந்து கரையும் தழலில்!

இலன் அடையாப் பொருளில்.
இலன் அடங்கா ஆசையில்.
இலன் அழியாப் பகையில்.
இலன் இரங்கா மனத்தில்.
இலன் ஈயாச் செல்வத்தில்.
இலன் உடல் சார் உறவில்.
இலன் உயிர் நோக்கா உணர்வில்.

உளன் தீ உள் விரல்விடில்.
உளன் தீப ஜோதி வடிவில்.
உளன் ஜோதி தரும் ஒளியில்.
உளன் ஒளி பரவும் வெளியில்.
உளன் வெளி தாண்டிய விரிவில்!

உளன் கதிரில், காற்றில், நீரில்.
உளன் பறவை, பாம்பு, மலரில்.
உளன் உன்னில், என்னில், யாவில்.
உளன் ஐம்பொறி தாண்டிய உணர்வில்!

உளன் எனில் உளன்.
உளம் தனில் அருளை உணர்ந்தோர்க் கென்றும்...
உளன் அவருள் உளன்!


அறியா, தெரியா, புரியா தவர்க்கும்,
அருள்மழை அயரா தனைவர்க்கும் பொழியும்...

என் குருநாதன், சத்குரு நாதன்,
இலன் எனினும் உளன்! 

@PrakashSwamy