Sunday, 5 January 2014

'ற்றோர்!'


தந்தையர் என்போர் வெறும் நுரை,
தானாக அவரால் பெரியதாய்ப் பயனில்லை
ஆனால் கட்டாயம் தேவை, முகச்சவரம் செய்யும் வரை.

தொடங்குவர் புதியதாய் எதையும் ஒவ்வொரு முறை,
சப்தம் அதிகமாய், செயல் குறைவாய்,
அயராது அடிக்கும் கடிகார மணிபோல், மணிக்கொரு முறை.

பற்பல பொருள் சேர்க்க இல்லை ஒரு எல்லை,
அத்தனையும் தேவை ஒவ்வொரு செயலுக்கும் என எண்ணி  
அவற்றைப் பயன்படுத்துவது பற்றியோ, இல்லை ஏதும்  கவலை.

தொடர்ந்து கவனிக்காவிட்டால் மிக வறண்டு போவார்
வரைமுறையின்றி வளர்ந்து விட்ட தாடிபோல்,
வெட்டுக் காயம் பற்றிக் கவலையின்றி, குடும்ப வளத்திற்கு, எப்போதும் செய்வார் பெரும் போர்.

தாயார் இருப்பார் வெந்தணலாய்
எரியும் நெருப்பை ஒளித்து ஆழமாய் உள்ளே
புகையும் சாம்பலும் மறைத்திருக்கும் செங்கனலாய்.



எப்போதும் விரும்புவார் குழந்தைகளின் நலன்,
எரிப்பார் ஒரு கணம் இருக்கும் இல்லத்தை
உருக்குவார் மறு கணம் உலோகத்திலிருந்து  அணிகலன்.

தீவிரமாய் சுட்டெரிப்பார் அவர் தம் உணர்வால்,
விளக்கை ஏற்றிடவும், உணவை சமைத்திடவும்
தொடக்கத்தில் தேவைப்படும் சுடர் போல்.

பரவிடும் கதகதப்பு நிறைந்த ஒரு படைப்பு
விண்மீன் நிறைந்த குளிர் இரவில் குளிர்காயும் நெருப்பைப் போல்,
செய்யக்கூடும் அவர் ஒரு மூர்க்கமான படையெடுப்பு.

தந்தையும் தாயும் சேர்ந்ததே குடும்பம் எனும் லீலை,
செங்கல்லும், சுண்ணாம்பும் சேர்த்துக் கட்டிய இல்லம்போல்.
அந்தக் கலவையை மாற்றுவது ஒரு பயனற்ற வேலை.

நுரை கொண்டு செய்வது குறையற்ற முகச்சவரம்.
சிறு நெருப்பாய் சண்டை சச்சரவு இருந்தால்தான் அது இல்லறம்.
நம் வாழ்வில் இருக்கலாம் சில உற்றார், பல மற்றோர்.
ஆனால் நம் வாழ்க்கைக்கு என்றும் உள்ளவர்தான் நம் பெற்றோர்!
.
@PrakashSwamy

1 comment:

  1. No matter how nicely written in English, the feel is much better when read in our dear Tamil :-) Thanks for sharing the pictures; loved them all (specially, you with your mother and junior with his mom and grandparents) :-)

    ReplyDelete