Tuesday, 31 December 2013

அவை அனைத்தும், அதற்கு மேலும்!

ஒளிர்வின் ஒளி
ஒளி விடும் சுடர் 
சுடர் தரும் திரி
திரி ஏற்றும் தீக்குச்சி

தீக்குச்சி தந்த மரம்
மரம் வளர்ந்த நிலம்
நிலம் ஆழத் தேக்கி வைத்த எண்ணெய்
எண்ணெய் ஊற்றிய தீபம்  

தீபம் உருவாக்கிய களிமண்
களிமண் தோண்டி எடுத்த பூமி
பூமி ஊட்டமளித்த உயிர்
உயிர் பல உரு, அளவு, நிறம் மற்றும் வடிவங்களில்

வடிவங்கள், அறிவால் உணர்ந்தவை, வளம் கொழிக்கும் இந்த கிரகம்
கிரகம் சுற்றும் ஒளிவீசும் சூரியன்
சூரியன் அச்சாணியாக உள்ள சூரிய மண்டலம்
சூரிய மண்டலம் இருக்கும் இந்தப் பிரபஞ்சம்  

பிரபஞ்சம் தாண்டிய அண்டப் பெருவெளி
பெருவெளி சுருங்கும் இடையில் - எனக்கும் இறைக்கும்
இறை, எங்கும் நிறைந்திருக்கும், உருவின்றி
உருவின்றி உள்ளது உருக்கொள்ளும், தன்னிலை உணர்ந்த ஞானியாய் 
ஞானியாய், ஜோதியாய், ஆதியாய் விளங்கும் சத்குரு
அவை அனைத்தும், அதற்கு மேலும்!
~ @PrakashSwamy

4 comments:

  1. wowwww.. simply superbbb.. coining the last word as the first word in the next line...awesome Prakash.. Really liked the below verse

    உருவின்றி உள்ளது உருக்கொள்ளும், தன்னிலை உணர்ந்த ஞானியாய்



    ஞானியாய், ஜோதியாய், ஆதியாய் விளங்கும் சத்குரு

    ReplyDelete
  2. "அவை அனைத்தும், அதற்கு மேலும்!" எழுதும்போது அது அந்தாதி என்ற கவிதை வகை என ஸ்வாமிக்குத் தெரியாது. இப்போது அது உங்களுக்கும் தெரியும் :)

    ReplyDelete
  3. I loved the way you have managed to capture the thought in two non-connectable languages in such a connected way :-) Only you possible... Loved it...

    ReplyDelete