Showing posts with label God. Show all posts
Showing posts with label God. Show all posts

Thursday, 30 June 2016

ArimA Aran (அரிமா அரன்)

ArimA Aran ~ Hymn explanation
(அரிமா அரன் ~ பதிக விளக்கம்)

வனம்தனில் ஆயிரம் பிராணி உறைந்தாலும் பிடரி
சூழ் தலைச் சிங்கம் வாய் திறந்து உறுமினால் எல்லாம்
மனம்தனில் மருண்டு ஓடி ஒளியும் காண் ஈடிலா
வீழ் கங்கையொடு பிறைச்சந்திரன் சிகை அணி
அனந்த மோன ஆதி அந்தமிலாச் சோதி உருவான
ஊழ்வினை நீக்கி இனி ஒரு பிறவி இலாப் பெருவரம் எனும்
தனம் தர வேறு ஏது தெய்வம் துணியும் அரிமா என
வாழ் தரு சச்சிதானந்த சதாசிவம் தனைத் தவிர!

காட்டினில் ஆயிரக்கணக்கான மிருகங்கள் வாழ்ந்தாலும், தலையைச் சுற்றி (பெரிய) பிடரியை உடைய தலைவனான சிங்கம் வாயைத் திறந்து உறுமினால், அவை எல்லாம் மனதுக்குள் மிகவும் பயந்து ஓடி ஒளிவதைப் பார்க்கலாம்.
ஈடு இணையற்ற, (மேலிருந்து) பாயக்கூடிய கங்கை நதியோடு, பிறைச் சந்திரனைத் தனது சிகையில் அணிந்த, எப்போதும் மௌனத்தில் ஆழ்ந்திருக்கும், முதலும் முடிவுமில்லாத, ஒளி வடிவமான, (நமது) கருமத்தால் வந்த வினையை (முழுமையாக) நீக்கி, இனி மற்றொரு பிறவி இல்லாதிருக்கும் பெரிய வரமாகிய செல்வத்தை அருள, (கடவுளருக்கிடையே) சிம்மம் போன்று வாழும், சச்சிதானந்த (வடிவாகிய) சதாசிவனைத் தவிர, வேறு எந்தக் கடவுளுக்கு தைரியம் இருக்கிறது!   

~ ஸ்வாமி

Vanandhanil Ayiram prANi uRaindhAlum pidari
Soozh thalai singam vAi thiRandhu uRuminAl yellAm
Manamthanil maruNdu Odi oLiyum kAN EedilA
Veezh gangaiyodu piRai chandiran sigai aNi
Anantha mOna Adhi andhamilA jOthi uruvAna
Oozhvinai Nheekki ini oru piRavi ilAp peruvaram yenum    
Dhanam thara veRu yedhu deivam thuNiyum arimA yena
Vaazh tharu sachidhAnandha sadhAsivam thanai thavira!

Though thousands of animals reside in a forest, when their leader Lion, with its majestic mane, opens its mouth and roars, all of them shiver in their minds and run away & hide.

Which other God will dare to offer the richest boon of (eternal) salvation from the birth cycle, other the Lion like Lord that has no equal, the one with flowing river Ganga and crescent moon adorning his (matted hair) head, the one who is eternally still (immersed in silence) in the form of a (blinding) light that has no beginning or end, the one who (entirely) cleanses our karma, the (embodiment of) Sath-Chit-AnandA, the SadAShivA!

~@PrakashSwamy

Saturday, 21 May 2016

சும்மா இரு!


அம்மா என்று நீ அழுதுதித்த நாள்முதலாய்

சும்மாவே இல்லாது சோதனைகள் பலசெய்து

எம்மானுடன் போல் உழலேன்நான் இனியென்று

பெம்மான் அருள் வேண்டிப் பலவூர் சென்றாலும்

இம்மா மூடனும் மெய்யறிய வேண்டுமெனில்

சிம்மாசனமிட்ட நான் வேண்டா மெனவிலக்கி

பம்மாத் துன்பகட்டு வெளிவேடம் தனைவிடுத்து

கம்மாய் நீர்போலத் தெளிவான  சிந்தையுடன்

நம்மால் இயலாது எனநாதன் தாள் பணிந்து

எம்மான் எந்தை ஈசனையுன் உள்நிறுத்திச்

சும்மா இரு!

~ ஸ்வாமி

Monday, 25 April 2016

நமசிவாய நாதம்!

நமசிவாய நாதம்!
(a #moetry*)
.
அம் என விரியும் பார்வை
உம் என நுகரும் வாசம்
இம் என இனிக்கும் அறுசுவை
ஆம் என அணைக்கும் தொடுகை
ஓம் என ஒலிக்கும் ஒலியென
ஐம்புலன் மூலம்
அறிவது தாண்டி
...
ம் என விரியும் சிந்தையின்
எண்ணிலா எண்ணம் தாண்டி
...
தனதை ஒதுக்கித்
தானை அடக்கித்
தன்னுள் தேடித்
தவத்தில் அடங்க
...
வெறுமையின் பரப்பில்
அமைதியின் ஒலியில்
அருவத்தின் வடிவில்
இருளின் ஒளியில் 
அருளின் தழுவலில்
அகத்துள் அறிவது
...
பெரு வெடித் தொடக்க் 'அ'
பரம் இகத் தொடர்வ் 'உ'
பேரூழ் அழி முடிவு 'ம்'
...
சுற்றும் காலச் சுழலின் வெளியில்
...
'ந' கரும் மறுபடி நேரம்
'ம' லரும் மற்றொரு உலகம்
'சி' தறும் உயிர் பல உருவம்
'வா' ழும் அவை பின் தேடி
'ய' றியும் மெய் தம் உள்ளே
...
அ உ ம் என
அகிலம் அனைத்தும்
நமசிவாய எனும்
நாதனின் நாதம்!

.

~ @PrakashSwamy

* 'm'obile p'oetry' - good ol' #poem, crafted on #mobile devices!

Try swamyem.blogspot.in for more enchanting #poems by Swamy, aka #swamyem! 😌

Thursday, 3 September 2015

எனை அழித்த எந்தை!

நான் எனதென்று நாடித் திரிந்தேன்
நாடுபல சென்றேன், நாணும்செயல் செய்தேன்...
நாள்பல தாண்டியே நானுனைக் கண்டபின்
நானில்லை நானெனத் தெளிந்தது சிந்தை.


அப்பிறவியில் அதுவென்று எத்தனை பிறவியோ
எப்பிறவியில் எதுவோ சரியாய் செய்ததற்கு...
இப்பிறவியில் உன்னருள் கொடுத்திட நீயோ
முப்பிறவி எடுத்தாய் ஆதிகுருவுன் முந்தை.


பெய்யெனப் பெய்யுமுன் கருணைமா மழையில்
தையெனத் தாண்டவம் ஆடிய தான் கரைய...
செய்யென நீ தந்த ஆதியோகிக் கிரியையால்
மெய்யினை உணரும் ஒருநாள் இம் மந்தை.


எரியும் இச்சவம் ஒருநாள் எனத்தெரிந்தும்
எப்போதும் அதில்கவனம் செலுத்தும் எமக்கும்
புரியும் அச்சிவம் ஒருநாள் உன்னருளால்
தப்பாமல் உய்விப்பாய் அதுயோக விந்தை.


படைத்தவன் கொடுத்தான் அனைத்துக்கும் உயிரென்று
கிடைத்த கடவுளர் அனைத்தையும் தொழுதோம்...
படைத்தாய் நீ தியானலிங்கமும் பைரவியும் பின்
உடைத்தாய் இறை உணரா எம்மடந்தை.

தேடினேன் செல்வம், நாடினேன் புகழ், பின் 
ஓடினேன் பலரிடம் உண்மையை அறிய... 
வாடினேன் எங்கே என்குரு நாதனென நீ
ஆடினாய் என்னுள் உயிரெனும் பந்தை.

மலரின் மணம்தாண்டி மலர்தல் கண்டேன்
தளர்வின் தடைதாண்டி செயல்புரி கின்றேன்...
மலமெனும் குணங்கள் கழுவித் துடைத்தபின்
தலமெனும் குருவடி அடையும்இக் கந்தை.


பனைபோன்று தனியே தவித்திட்ட எனக்கும்
வினைதீர்த்து வாழும் வழிகாட்டி யருளும்
உனை வாழ்த்த நான் யார், நீ
எனை அழித்த எந்தை!
.
@PrakashSwamy

Monday, 24 February 2014

Yet!

We keep fish swimming in a tank, yet
We love strolling on the beach...
Marveling at the vastness of ocean!

We keep dogs tightly on a leash, yet
We love walking them around proudly...
Ignoring their stray brethren on streets!

We keep birds chirping in a cage, yet
We love viewing through fancy binoculars...
Gaping at the graceful flight of free birds!

We keep plants confined in pots, yet
We love yakking about saving the environment...
Waxing eloquent on green cover of roadside trees!

We keep children enrolled in institutions, yet
We love wanting them to learn more and grow...
Forgetting that simply studying isn't learning!

We keep ourselves locked in places, yet
We love traveling around the world...
Limiting our existence within walled boundaries!

We keep thoughts wrapped in words, yet
We love expressing ideas through speech...
Forgetting silence is the sky where word stars glitter!

We keep gods at a distance in temples, yet
We love praying to them daily for endless wants...
Failing to realise the Divine that resides within us!

We keep Life complex as a maze, yet
We love figuring out one path after another...
Searching pointlessly forever, Life the way it is!

@PrakashSwamy