Wednesday 16 September 2015

க-விதை 10 ~ இங்கே... இவர்கள்...

இங்கே...
பெண் குழந்தை பிறக்கும்போது,
தாலாட்டுப் பாடவேண்டிய
தாய்மார்கள்...
ஒப்பாரி வைக்கிறார்கள்!

இங்கே...
அரசியலில் பல திருடர்கள்
அரசின் காவலர்களாயிருக்க,
நீதி வழங்கும் சில
நீதியரசர்கள்...
தங்கள் தீர்ப்புகளால்
நீதியைத் தண்டிக்கிறார்கள்!

இங்கே...
வரதட்சணை கொடுத்தும்
வாழாவெட்டியாக
விரும்பாத பெண்கள்...
தளையென்று திருமணத்தை
வெட்டி விட்டுத்
தனியே வாழ
முடிவெடுத்து விட்டார்கள்!

இங்கே...
அரசை எதிர்த்துப் போராடத்
துடிக்கும் ஆசிரியர்களுக்கு,
மாணவர்கள்...
பாடம் நடத்துகிறார்கள்!

இங்கே...
தனி மாநிலத் தாய்க்குப்
பொட்டு வைக்க விரும்பும்
தீவிரவாதிகள்...
தம் மாநிலச்
சகோதரிகளின் பொட்டுகளைத்
தீவிரமாய் அழிக்கிறார்கள்!

இங்கே...
மழை வேண்டிச் செய்யும்
யாகத்தில் எரிக்க
மூட மனிதர்கள்...
மரங்களை வெட்டுகிறார்கள்!

இங்கே...
இட ஒதுக்கீடு சட்டம்போட்டு
இந்திய சகோதர/ரிகளிடையே
ஒற்றுமைக்கு இடமின்றி
ஒதுக்கி வைக்கிறார்கள்!

இங்கே...
வேலைவெட்டி ஏதுமில்லா
இளைஞர்கள்...
சினிமா, அரசியல்
சித்துவிளையாட்டில் மூழ்கி
வெட்டிவேலை செய்கிறார்கள்!

இங்கே...
கல்வி கற்றபின்
கனவுடன் இளைஞர்கள்
தொழில்தேடி அலைய,
கல்லூரி அதிபர்கள்...
கல்வியைத் தொழிலாக்கிவிட்டார்கள்!

இங்கே...
வெள்ளை அடிமைச் சிறையின்
விலங்குடைத்துப் பெற்ற
சுதந்திரத்துக்கு தினம்
கொண்டாடுபவர்கள்...
தனிமனித
சுதந்திரத்தை தினம்
விலங்கு பூட்டிச்
சிறையில் அடைக்கிறார்கள்!

இங்கே...
இறந்த காலத்தில்
இழந்த வாய்ப்புகளை மறந்து
எதிர்கால வெற்றிச் சிகரங்களுக்காக
நிகழ்கால அஸ்திவாரங்களை
அடகு வைத்துக்கொண்டிருக்கிறார்கள்!
.

க-விதை is the #Swamyem series of #poetry - long & short - from Swamy's youthful past, with a liberal dose of existential angst & enchanting #love, some of which got published in popular magazines!
#தமிழ் #கவிதை #poem #poetry #tamil #Youth #love #think #Thinking

க-விதை 9 ~ பார்வை

ஒவ்வொரு முறையும்
உன்
ஓரக்கண் பார்வைக்கே
கொதிக்கும் நான்...
குளிர்ந்து போகிறேன்.
ஒட்டுமொத்தமாய்
நான்
பனிக்கட்டி போல்
இறுகிப் போவேனோ
என்ற பயத்தில்தான்...
உன் முழுக்கண்ணால்
என் முகம் பார்க்க
மறுக்கிறாயோ!

க-விதை is the Swamyem series of poetry - long & short - from Swamy's youthful past, with a liberal dose of existential angst & enchanting love, some of which got published in popular magazines!

க-விதை 8 ~ வந்தது

வில் புருவம்
வளைத்து எய்த
விழி அம்பு
இதயம் தைக்க,
வந்தது குருதியல்ல...
காதல்!

க-விதை is the Swamyem series of poetry - long & short - from Swamy's youthful past, with a liberal dose of existential angst & enchanting love, some of which got published in popular magazines!

க-விதை 6 ~ தூங்கும் பூனை

கலைந்த தலை
அடர்ந்த தாடி
காவி குர்த்தாவுடன்,
கால்நீட்டி, வால்மடக்கி ஒரு
தூங்கும் பூனையின்
அழகைக் கவி எழுதும்
இலக்கியவாதியின்
வீட்டு அடுப்பிலும்...

க-விதை is the Swamyem series of poetry - long & short - from Swamy's youthful past, with a liberal dose of existential angst & enchanting love, some of which got published in popular magazines!

க-விதை 7 ~ சாதி ஒழிப்பு

சாதி ஒழிப்பு வாரியத்தில்
வேலைக்கு மனுப் போட்டேன்.
பெயர், படிப்பு,
பிறந்த தேதிக்குப்பின்,
மனுவில் அடுத்தது...
மதம் -
சாதி -
!

க-விதை is the Swamyem series of poetry - long & short - from Swamy's youthful past, with a liberal dose of existential angst & enchanting love, some of which got published in popular magazines!

க-விதை 5 ~ உள்ளே -  வெளியே

'தேவர்மகன்' பார்த்துவிட்டு
தாடியுடன், தலையில்
நீளமாய் முடிவளர்க்கும்
நண்பனே...
கமலின் தலைக்கு
உள்ளேயும் சரக்குண்டு!
உனக்கு?

க-விதை is the Swamyem series of poetry - long & short - from Swamy's youthful past, with a liberal dose of existential angst & enchanting love, some of which got published in popular magazines!

க-விதை 4 ~ நாய்

கம்பெனியில்
காலை ஷிஃடில்
காஃபியும் கேக்கும் வந்தன.
கியூவில் நின்றவர்
பாய்ந்து தின்கையில்,
ஒரு நாயும் நின்றது...
ஓரமாய், ஒழுக்கமாய்.
நான் என் கேக்கை
நாய்க்குத் தந்தேன்!

க-விதை is the Swamyem series of poetry - long & short - from Swamy's youthful past, with a liberal dose of existential angst & enchanting love, some of which got published in popular magazines!

க-விதை 3 ~ மழை

மின்னல் விளக்கொளியில்
இடி மத்தளத்துடன்
தவளைத் தம்புரா பின்னணியில்
ஏழை செல்வர் பேதமின்றி,
கிடைத்த இடத்தில்
ஒதுங்கி கவனிக்க...
இயற்கை நடத்தும்
இலவசக் கச்சேரி!

க-விதை is the Swamyem series of poetry - long & short - from Swamy's youthful past, with a liberal dose of existential angst & enchanting love, some of which got published in popular magazines!

க-விதை 2 ~ ஏழைகள்

என்றோ வரும் விடியலுக்காகக்
காத்திருந்து, காத்திருந்து
இருளில் வாழப்
பழகிக்கொண்டவர்கள்!

க-விதை is the Swamyem series of poetry - long & short - from Swamy's youthful past, with a liberal dose of existential angst & enchanting love, some of which got published in popular magazines!

க-விதை ~ Swamyems from Swamy's youthful past

Some of you've got to taste Swamy's #poems - in English & தமிழ் - for a while now. If not (yet), you can immerse yourself in present day Swamyems here - http://swamyem.blogspot.com 👍

What would probably be a surprise is the fact that Swamy has been penning (literally ✒) #poetry in the  eighties & nineties as well, a time when the format of புதுக்கவிதை (New poetry - literally 💃) was very popular. 😎 Since many of his #millennial (& Jurassic) pals may've no clue about this poetry phenomenon, Swamy decided to share some of his New Swamyems, i.e. புதுக்கவிதைகள், on #socialmedia. 😈

While enjoying or reacting to the க-விதை,  do keep in mind that the stars of poetry world at that time were Meera (மீரா), Mehta (மு. மேத்தா), Kamarasan (நா. காமராசன்), Aathmanam (ஆத்மாநாம்) & the like and one Vairamuthu (வைரமுத்து) wasn't Emperor of Poets  (கவிப்பேரரசு) yet! Oh btw, Swamy's all time favourite #author, the genius named #Sujatha was brushing aside some of the popular poems of that time as mere smart verbiage (புத்திசாலித்தனமான வரிகள்) that masquerade as #poetry 👊🙊

If there's one aspect of #poetry that assures its longevity (we still cherish திருக்குறள் &  ஆத்திச்சூடி, don't we 👌), it's the fact that the ideas & imagination of a #poet remains fresh & relevant long after s/he's gone, even as the world as we know it has changed so much that it's hard to explain who #Kapildev & #SivajiGanesan are to our offspring!

Feel free to like, comment & share, after you cherish each #Swamyem, aka க-விதை, the vibrant poetry - short & long - series, from Swamy's youthful past, with a liberal dose of emotions from existential angst & enchanting love (he did eventually marry his sweetheart - quite a feat for an orthodox middle class boy in the small south Indian town of Madurai)! 🌻

க-விதை 1 ~ இழந்தேன்

நேற்றைய நினைவுகளில்
மூழ்கியிருந்தபோது,
நாளை வந்துவிட...
இன்றை இழந்தேன்!

க-விதை is the Swamyem series of poetry - long & short - from Swamy's youthful past, with a liberal dose of existential angst & enchanting love, some of which got published in popular magazines! 

Thursday 3 September 2015

எனை அழித்த எந்தை!

நான் எனதென்று நாடித் திரிந்தேன்
நாடுபல சென்றேன், நாணும்செயல் செய்தேன்...
நாள்பல தாண்டியே நானுனைக் கண்டபின்
நானில்லை நானெனத் தெளிந்தது சிந்தை.

அப்பிறவியில் அதுவென்று எத்தனை பிறவியோ
எப்பிறவியில் எதுவோ சரியாய் செய்ததற்கு...
இப்பிறவியில் உன்னருள் கொடுத்திட நீயோ
முப்பிறவி எடுத்தாய் ஆதிகுருவுன் முந்தை.

பெய்யெனப் பெய்யுமுன் கருணைமா மழையில்
தையெனத் தாண்டவம் ஆடிய தான் கரைய...
செய்யென நீ தந்த ஆதியோகிக் கிரியையால்
மெய்யினை உணரும் ஒருநாள் இம் மந்தை.

எரியும் இச்சவம் ஒருநாள் எனத்தெரிந்தும்
எப்போதும் அதில்கவனம் செலுத்தும் எமக்கும்
புரியும் அச்சிவம் ஒருநாள் உன்னருளால்
தப்பாமல் உய்விப்பாய் அதுயோக விந்தை.

படைத்தவன் கொடுத்தான் அனைத்துக்கும் உயிரென்று
கிடைத்த கடவுளர் அனைத்தையும் தொழுதோம்...
படைத்தாய் நீ தியானலிங்கமும் பைரவியும் பின்
உடைத்தாய் இறை உணரா எம்மடந்தை.

தேடினேன் செல்வம், நாடினேன் புகழ், பின் 
ஓடினேன் பலரிடம் உண்மையை அறிய... 
வாடினேன் எங்கே என்குரு நாதனென நீ
ஆடினாய் என்னுள் உயிரெனும் பந்தை.

மலரின் மணம்தாண்டி மலர்தல் கண்டேன்
தளர்வின் தடைதாண்டி செயல்புரி கின்றேன்...
மலமெனும் குணங்கள் கழுவித் துடைத்தபின்
தலமெனும் குருவடி அடையும்இக் கந்தை.

பனைபோன்று தனியே தவித்திட்ட எனக்கும்
வினைதீர்த்து வாழும் வழிகாட்டி யருளும்
உனை வாழ்த்த நான் யார், நீ
எனை அழித்த எந்தை!
.
@PrakashSwamy