Monday, 19 January 2015

ஆம் நம சிவாய!

சிவமே இனி எம் தவமே
தவமே தரும் சிவ பதமே 
சிவம் இலையேல் இது 
சிந்திக்கும் சவமே
அடிமுடி காணா 
ஒளியுரு வான
சிவ சிவ சிவ சிவ 
சிவ 
சிவ சிவாய.





பித்தனைப் போல் திருமேனி
சித்தனவன் முதல் ஞானி
எழில் உமை  ஏழ் முனிக் 
குரு வென அருளிய
உறுமலில் உலகினை
உதித்திடச் செய்திடும்
சிவ சிவ சிவ சிவ 
சிவ 
சிவ சிவாய!


ஆனை முகத்தான் முதல்வன்
அழகு மயில் மேல் இளையோன் 
சபரியின் அரிஹர 
சுதனுக்கு மப்பன்
கூடல்மா நகர்விளை  
யாடல்கள் புரிந்திட்ட 
சிவ சிவ சிவ சிவ 
சிவ 
சிவ சிவாய!






சடையினில் நிலவலங் கரித்து

இடையினில் புலியுடை தரித்து
சிரமதில் கங்கை கரமதில் சூலம் 
பதம்பணி நந்தி கணங்களும் சூழ
உடுக்கையின் ஒலியுடன்
களி நடம் புரிந்திடும்
சிவ சிவ சிவ சிவ 
சிவ 
சிவ சிவாய!
பனி படர் கயிலையில் வாசம்
பணிந் திடும் பித்தர்மேல் பாசம்
மலை மடு மரம் சூழ் 
வெள்ளியங் கிரியடி
மோனமாய் அதிரும்
தியானலிங் கமதும் 
சிவ சிவ சிவ சிவ 
சிவ 
சிவ சிவாய!



நான் எனது எனும் மாயம்
நான் என்பதோ வெறும் காயம்
அவனின்றி அணுவும் 
அசையா தெனவே
தாண்டவக் கோணின்
தயவினை நாடுவம்
சிவ சிவ சிவ சிவ
சிவ 
சிவ சிவாய.





அறிந்த தெல்லாம் கை யளவே
அறியா தது மெய் யறிவே
அறிந்தவர் புரியார் 
புரிந்தவர் அறியர் 
பிறப்பினில் தொடங்கும்
இறப்பினில் தொடரும்
சிவ சிவ சிவ சிவ 
சிவ 
சிவ சிவாய.


இகபர இன்பமும் வேண்டா 
இனி யொரு பிறவியும் வேண்டா
பணி, பிணி, மனை, பணம்
கட்டி னை அறுத்திட்டு
அறிதுயில் புகுமுன் 
அறிவொளி தருமின் 
சிவ சிவ சிவ சிவ 
சிவ 
சிவ சிவாய!




சிவ சிவ சிவ சிவ 
சிவ சிவ சிவாய! 
சிவ சிவ சிவ சிவ 
சிவ குரு சிவாய! 
சிவ சிவ சிவ சிவ 
சிவ சதா சிவாய! 
சிவ சிவ சிவ சிவ 
ஆம் நம சிவாய! 


@PrakashSwamy

1 comment: