Saturday, 8 March 2014

பெண்மை!

தன்னுள் தாங்கி, தவமாய்ச் சுமந்து,  
தன்னிடமிருந்து பிரித்து, தனதாக வளர்த்து,
தன்னலமின்றி உயிர் தரும் தெய்வத் தாய்...

முன்னோ பின்னோ உடன் பிறந்து,
கண்ணால் கருத்தறிந்து, கடிந்து, காத்து,
எண்ணமறிந்து உதவி புரியும் அன்புச் சகோதரி...

கண்களால் கவிதை சொல்லி, கைகளால் தலை கோதி
விண்மீன் எண்ணி முடியும் வரை என்னவோ கதை பேசி,
இப்பிறவி இவளுக்காக என ஏங்க வைக்கும் காந்தக் காதலி...


முன்பின் அறியா முரடனோ மூடனோ,
முதலில் தயங்கி, பின் என்னவன் என்றபின் மயங்கி,

அன்பும், அரவணைப்பும் அளிக்கும் ஆருயிர் மனைவி...



சொந்த உறவின்றி, பந்தப் பசையின்றி,
குற்றம், குறை, கவிதை, காதல், கவலையென்று,
எந்த விஷயமும் பொறுமையாய்க் கேட்டு வழிகாட்டும் அருமைத் தோழி...

ன்பில் அகல்
ர்வத்தில் அனல்,
னிமையில் சந்திரன்
கையில் வான்மழை,
ணர்வில் செந்தணல்
க்கத்தில் எறும்பு,
ண்ணத்தில் ஒருமை
க்கத்தில் பன்மை,
ம்புலனும் கொண்டு அடுத்தவர்க்குத் தொண்டு,
துக்கும் துணிவு
டி உதவும் கனிவு,
டதமாய் அளவின்றி அளிக்கும் அன்பு,

கின் உறுதிகொண்ட, எதற்கும் அயராத...

ஈடா எனும் இறை சக்தித் தன்மை
ஈடிலா உயிராய் மலர்ந்ததே பெண்மை!



5 comments:

  1. Wonderful TM. Thank you so much for the thoughtful gesture. Warm Women's Day wishes to your phenomenal better half as well.

    ReplyDelete
  2. மிக்க நன்றி :-)

    ReplyDelete