Saturday, 21 May 2016

சும்மா இரு!


அம்மா என்று நீ அழுதுதித்த நாள்முதலாய்

சும்மாவே இல்லாது சோதனைகள் பலசெய்து

எம்மானுடன் போல் உழலேன்நான் இனியென்று

பெம்மான் அருள் வேண்டிப் பலவூர் சென்றாலும்

இம்மா மூடனும் மெய்யறிய வேண்டுமெனில்

சிம்மாசனமிட்ட நான் வேண்டா மெனவிலக்கி

பம்மாத் துன்பகட்டு வெளிவேடம் தனைவிடுத்து

கம்மாய் நீர்போலத் தெளிவான  சிந்தையுடன்

நம்மால் இயலாது எனநாதன் தாள் பணிந்து

எம்மான் எந்தை ஈசனையுன் உள்நிறுத்திச்

சும்மா இரு!

~ ஸ்வாமி